எனது உறவினர் மகன் சென்னையில் வேலை பார்த்து வந்தார். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஜாதகர் தற்போது உயிருடன் இருக்கிறாரா? இருந்தால் எப்போது வருவார்? - வாசகர், முசிறி

உங்கள் உறவினரின் மகனுக்கு கன்னி லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் கர்ம ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கும்

உங்கள் உறவினரின் மகனுக்கு கன்னி லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் கர்ம ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப்படுவதாலும் ஆயுள்காரகரான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். இதனால் ஆயுள் தீர்க்கமாகும். தற்சமயம் லாபாதிபதியின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குடும்பத்துடன் இணைவார். பிரதி திங்கள் கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com