எனது மகன் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது வேலை எவ்வாறு இருக்கும்? திருமணம் எப்போது அமையும்? - வாசகர், திருவானைக்காவல்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி உச்சம் பெற்று அமர்ந்து இருப்பது சிறப்பு. சுகாதிபதியும் (கேந்திராதிபதி) பூர்வபுண்ணியாதிபதியும் (ஒரு திரிகோணாதிபதி) தொழில் ஸ்தானத்தில் இணைந்து

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி உச்சம் பெற்று அமர்ந்து இருப்பது சிறப்பு. சுகாதிபதியும் (கேந்திராதிபதி) பூர்வபுண்ணியாதிபதியும் (ஒரு திரிகோணாதிபதி) தொழில் ஸ்தானத்தில் இணைந்து புதஆதித்ய யோகத்தைப் பெற்று சுக ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். சூரியபகவான் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்றிருக்கிறார். குருபகவான் உச்சம் பெற்று களத்திர ஸ்தானத்தையும் பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியையும் லாப ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் உச்சம் பெற்ற சுக்கிரபகவானையும் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதியும் லக்னத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தையும் களத்திர ஸ்தானத்தையும் அஷ்டம ஸ்தானத்தையும் பார்வை செய்வது சிறப்பு. செவ்வாய், குரு, சூரிய பகவான்கள் தங்களின் வீடுகளைப் பார்ப்பதும் சிறப்பாகும். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள சனிபகவானுடன் இணைந்திருக்கும் அஷ்ட மகா நாகயோகம் பெற்றுள்ள ராகுபகவானின் தசை நடப்பதால் செய்தொழிலில் படிப்படியாக முன்னேறி நல்ல நிலையை எட்டி விடுவார். அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். வெளிநாடு செல்லும் பாக்கியமும் உண்டு. எதிர்காலம் வளமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com