நான் கட்டுமானத் தொழில் செய்து வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் எம். இ., படித்துள்ளார். அவரை எனது தொழிலில் சேர்த்துக் கொண்டேன். எம். இ., படித்துள்ள இளைய மகனும் தற்போது இத்தொழிலில் இறங்க விரும்புகிறார். அவருக்கு கட்டுமானத்தொழில் பொருத்தமாக இருக்குமா? - வாசகர், சென்னை

உங்கள் இரண்டாம் மகனுக்கு துலா லக்னம், துலா ராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று இருக்கிறார்.

உங்கள் இரண்டாம் மகனுக்கு துலா லக்னம், துலா ராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று இருக்கிறார். தர்மகர்மாதிபதிகள் லக்னத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார்கள். குடும்பம், களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகள்கழித்து அவரை சொந்தத் தொழிலில் ஈடுபடுத்தலாம். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com