சுடச்சுட

    

    எனது இரண்டாம் மகன் நல்ல வேலைக்குச் செல்வாரா? அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?  - வாசகர், வியாசர்பாடி

    By DIN  |   Published on : 31st May 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் இரண்டாம் மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி. களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. பாக்கிய ஸ்தானத்தில் லக்னாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதி, குடும்பாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. அதோடு குருபகவானின் பார்வை லக்னத்தின் மீதும் சந்திரபகவானின் மீதும் படிகிறது. குருசந்திர யோகம், குருமங்கள யோகம், பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அவருக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தனியார் துறையில் படிப்புக்கேற்ற உத்தியோகம் அமையும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். உங்கள் பிறந்த நேரம் இல்லாததால் ஜாதகத்தைக் கணிக்க முடியவில்லை. மற்றபடி உங்கள் பிறந்த தேதியின்படி உங்களுக்கு பூரம் நட்சத்திரம் என்று வருகிறது. பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai