சுடச்சுட

    

    என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர், திருவெறும்பூர்

    By DIN  |   Published on : 31st May 2019 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார். களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி, புத, சனி பகவான்களுடன் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுகாதிபதியான சந்திரபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை, எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai