Enable Javscript for better performance
என் மகளுக்கு ராகு தோஷம் உள்ளதா? நல்ல வரன் அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எப்போது திருமணம் கைகூடு- Dinamani

சுடச்சுட

    

    என் மகளுக்கு ராகு தோஷம் உள்ளதா? நல்ல வரன் அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எப்போது திருமணம் கைகூடும்?  - வாசகி, சென்னை

    By DIN  |   Published on : 31st May 2019 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். அவருக்கு சர்ப்ப தோஷம் உள்ளது. சர்ப்ப தோஷம் உள்ளவர்களைத்தான் சேர்க்க வேண்டுமா என்று பலரும் கேட்கிறார்கள். இதற்கு பதில் "இல்லை' என்றே கூற வேண்டும். குடும்ப ஸ்தானத்தில் ஒரு பலம் பெற்ற கிரகம் அமர்ந்திருக்கிறது என்று கொண்டு பொருத்தம் பார்க்க வேண்டும். அதோடு குருபகவான் சுக ஸ்தானத்தையும் சத்ரு ஸ்தானத்தையும் அஷ்டம மாங்கல்ய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் குருபகவானின் பார்வையை பெறும் சூரியபகவானின் தசையில் குருபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். உள்ளூரிலேயே வரன் அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை. வருடமொருமுறை குலதெய்வ வழிபாட்டைச் செய்து வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai