Enable Javscript for better performance
என் மகள் பட்டப்படிப்பு கடைசி ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு வேலை வாய்ப்பு எவ்வாறு இருக்கும்? வெளி- Dinamani

சுடச்சுட

    

    என் மகள் பட்டப்படிப்பு கடைசி ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு வேலை வாய்ப்பு எவ்வாறு இருக்கும்? வெளிநாட்டில் வேலை பார்க்கும் பாக்கியம் உண்டா? அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?  - வாசகி, அசோக்நகர்

    By DIN  |   Published on : 31st May 2019 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், துலாம் ராசி. லக்னாதிபதி மாங்கல்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று, தன களத்திர ஸ்தானாதிபதியுடனும் பாக்கியாதிபதியுடனும் இணைந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் லாபாதிபதியான சூரியபகவான் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் சிவராஜ யோகம் உண்டாகிறது. தொழில் ஸ்தானாதிபதி லக்னத்தில் குருபகவானுக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் படிப்பு முடிந்தவுடன் உடனடியாக வேலை கிடைத்துவிடும். தனியார் துறையில் வேலை அமையும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகம் இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு உண்டாகும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும்.பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai