Enable Javscript for better performance
அரசுப் பணியில் உள்ள எனது மகளுக்கு பெரும் முயற்சி எடுத்து வரன் பார்த்து, பத்திரிகை அடித்தும் திருமணம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பணியில் உள்ள எனது மகளுக்கு பெரும் முயற்சி எடுத்து வரன் பார்த்து, பத்திரிகை அடித்தும் திருமணம் நின்று விட்டது. மகளின் ஜாதகத்தில் 7- இல் சூரியனும் 8- இல் சனி, புதனும் இருப்பதால் எப்படிப்பட்ட வரன் பார்க்க வேண்டும்? அரசுத்துறையில் வேலை பார்க்கும் வரன் கிடைக்குமா?  - வாசகர், பெருந்துறை

    By DIN  |   Published on : 15th November 2019 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதியும் தர்கர்மாதிபதியும் மாங்கல்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். களத்திர, நட்பு ஸ்தானாதிபதி செவ்வாய்பகவான் ஆறாம்வீட்டில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார். மற்றபடி சுகாதிபதி களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது பெரிய பாதிப்பு என்று கூற முடியாது. மற்றபடி அவருக்கு தற்சமயம் தர்மகர்மாதிபதியின் தசையில் புதபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான வரன் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். தனியார் துறையிலிருந்து வரன் அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai