எனக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது. குழந்தை பாக்கியம் இன்னும் கிட்டவில்லை. எப்போது கிடைக்கும்? - வாசகர், காலடிப்பேட்டை
By DIN | Published on : 15th November 2019 12:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உங்களுக்கு கும்பலக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். பூர்வபுண்ணியாதிபதி, பாக்கியாதிபதியுடன் தைரிய ஸ்தானத்தில் இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். தற்சமயம் ராகுபகவானின் தசையில் புதபகவானின் புக்தி நடக்கிறது. உங்கள் மனைவிக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் மூலதிரிகோணம் பெற்றும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் குருபகவானுடன் இணைந்திருக்கும் சனிபகவானின் தசையில் பாக்கியாதிபதியான சந்திரபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.