என் மகனின் பிறந்த குறிப்பை அனுப்பி இருக்கிறேன். என் மகனுக்கு எப்போது திருமணம் ஆகும்? எந்த திசையிலிருந்து பெண் அமைவார்? ஏற்ற பெண் அமைவாரா? எதிர்காலம் சிறப்பாக அமையுமா? - வாசகி, கோயம்புத்தூர்
By DIN | Published on : 15th November 2019 12:06 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். பூர்வபுண்ணியாதிபதி சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்று நவாம்சத்தில் ஆட்சிபெறுகிறார். பாக்கியாதிபதி சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் திக்பலம் பெற்று இருக்கிறார். களத்திர நட்பு தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சூரிய, சந்திர, புத பகவான்களைப் பார்வை செய்கிறார். இதனால் தகுதியான இடத்திலிருந்து பெண் அமைந்து மணவாழ்க்கை சிறப்பாக அமையும். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.