Enable Javscript for better performance
என் மூத்த மகன் படிப்பை முடித்து ஒர் ஆண்டு ஆகிறது. இன்னும் வேலை அமையவில்லை. எப்போது வேலை அமையும்? அரச- Dinamani

சுடச்சுட

    

    என் மூத்த மகன் படிப்பை முடித்து ஒர் ஆண்டு ஆகிறது. இன்னும் வேலை அமையவில்லை. எப்போது வேலை அமையும்? அரசுத்துறையில் அமையுமா? திருமண யோகம் எப்போது வரும்? இரண்டாவது மகன் மருத்துவத் துறையை விரும்பினார். ஆனால் மதிப்பெண் குறைவாக இருந்ததால் கிடைக்கவில்லை. எந்த துறை இவருக்குப் பொருத்தமாக இருக்கும்?  - வாசகர், புதுச்சேரி

    By DIN  |   Published on : 15th November 2019 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மூத்த மகனுக்கு சிம்ம லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும், பூர்வபுண்ணியாதிபதி குருபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்று லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய்பகவானைப் பார்வை செய்வதும் சிறப்பாகும். அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தனியார் துறையில் தகுதியான வேலை கிடைக்கும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும்.
     உங்கள் இளைய மகனுக்கு சிம்ம லக்னம், சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி. லக்னாதிபதி தொழில் ஸ்தானத்திலும் தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்திலும் பூர்வபுண்ணியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் தசை நடப்பதால் பொறியியல் படிப்பு முடிந்தவுடன் நல்ல வேலை உடனடியாகக் கிடைத்துவிடும். தனியார் துறையிலேயே உயர்ந்த நிலையை எட்டி விடுவார். அரசு வேலை அமைய வாய்ப்பு குறைவு. உங்கள் குடும்ப மேன்மைக்காக பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai