Enable Javscript for better performance
கணவரை விட்டுப் பிரிந்து வாழ்கிறேன். அவர் திருந்தி வருவாரா? எனக்கு அரசு வேலை கிடைக்குமா?  - வாசகி, சங- Dinamani

சுடச்சுட

    

    கணவரை விட்டுப் பிரிந்து வாழ்கிறேன். அவர் திருந்தி வருவாரா? எனக்கு அரசு வேலை கிடைக்குமா?  - வாசகி, சங்கரன்கோவில்

    By DIN  |   Published on : 15th November 2019 12:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு துலாம் லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தானாதிபதி விபரீத ராஜயோகம் பெற்று தைரிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார். சுக, பஞ்சமாதிபதி குடும்ப ஸ்தானத்திலும் பாக்கியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் அமர்ந்திருப்பது சிறப்பு. தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு (2020) ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு உங்கள் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். மீண்டும் குடும்பத்துடன் இணைந்து வாழ வழி பிறக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai