Enable Javscript for better performance
நான் இசிஇ., முடித்துவிட்டு, ஐஏஎஸ்., தேர்விற்கு படித்து வருகிறேன். எந்த அரசுத் தேர்விலும் வெற்றி பெறவ- Dinamani

சுடச்சுட

    

    நான் இசிஇ., முடித்துவிட்டு, ஐஏஎஸ்., தேர்விற்கு படித்து வருகிறேன். எந்த அரசுத் தேர்விலும் வெற்றி பெறவில்லை. உடல்நிலையும் அடிக்கடி சரியில்லாமல் போகிறது. உடல்நிலை எப்போது சீராகும்? அரசுப்பணி கிடைக்குமா?  - வாசகர், திருவண்ணாமலை

    By DIN  |   Published on : 15th November 2019 12:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு கும்ப லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று சச மகா யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். பாக்கியாதிபதி சுக்கிரபகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தன, லாபாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும் தைரிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர, கேது பகவான்களையும், பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் அங்கு ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் புதபகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சுக்கிரமகா தசை முடியும் தறுவாயில் உள்ளது. கோசாரமும் வலுவாக உள்ளதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்ல அரசு வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் சீர்பட்டு விடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai