Enable Javscript for better performance
நான் எம்.எஸ்.சி. முடித்துள்ளேன். அரசுத்தேர்வுக்குப் படித்து வருகிறேன். வெற்றி கிடைக்குமா? அரசுப்பணி- Dinamani

சுடச்சுட

    

    நான் எம்.எஸ்.சி. முடித்துள்ளேன். அரசுத்தேர்வுக்குப் படித்து வருகிறேன். வெற்றி கிடைக்குமா? அரசுப்பணி கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?  - வாசகர், சிங்காநல்லூர்

    By DIN  |   Published on : 15th November 2019 12:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு மீன லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார். பூர்வபுண்ணியாதிபதியான சந்திரபகவான் தொழில் ஸ்தானத்திலும் தன பாக்கியாதிபதி செவ்வாய்பகவான் புதன், சனி, பகவான்களுடன் இணைந்து சூரியபகவானால் பார்க்கப்படுகிறார்கள். சூரியபகவானும் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் அரசு கிரகங்கள் வலுவாக இருக்கிறார்கள் என்று கூற வேண்டும். அதனால் அரசு வேலை கிடைக்கும். தற்சமயம் சூரியபகவானின் தசை நடப்பதும் சிறப்பாகும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு வேலை கிடைக்கும். இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai