எனது இரண்டாவது மகள் அமெரிக்காவில் ஐ.டி., துறையில் பணியாற்றுகிறார். தற்போது விடுமுறையில் வந்துள்ளார். திருமணம் எப்போது கைகூடும்?  - வாசகர், மயிலாடுதுறை

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவானுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்து

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவானுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்து புதஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணியாதிபதியான சுக்கிரபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்திலும் பாக்கியாதிபதி சனிபகவான் ஆறாம் வீட்டில் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானின் பார்வையை பெறுவதும் சிறப்பு. பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சந்திரபகவான் அமர்ந்து லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் செவ்வாய்பகவானின் பார்வையை பெற்று சந்திரமங்கள யோகத்தைப் பெறுகிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் லக்னாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமெரிக்காவில் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com