நான் எம்.எஸ்.சி. முடித்துள்ளேன். அரசுத்தேர்வுக்குப் படித்து வருகிறேன். வெற்றி கிடைக்குமா? அரசுப்பணி கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?  - வாசகர், சிங்காநல்லூர்

உங்களுக்கு மீன லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை

உங்களுக்கு மீன லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார். பூர்வபுண்ணியாதிபதியான சந்திரபகவான் தொழில் ஸ்தானத்திலும் தன பாக்கியாதிபதி செவ்வாய்பகவான் புதன், சனி, பகவான்களுடன் இணைந்து சூரியபகவானால் பார்க்கப்படுகிறார்கள். சூரியபகவானும் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் அரசு கிரகங்கள் வலுவாக இருக்கிறார்கள் என்று கூற வேண்டும். அதனால் அரசு வேலை கிடைக்கும். தற்சமயம் சூரியபகவானின் தசை நடப்பதும் சிறப்பாகும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு வேலை கிடைக்கும். இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com