Enable Javscript for better performance
எனக்கு 60 வயதாகிறது. உடல்நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இது எப்பொழுது சரியாகும்? குடும்பத்திலும் மக- Dinamani

சுடச்சுட

    

    எனக்கு 60 வயதாகிறது. உடல்நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இது எப்பொழுது சரியாகும்? குடும்பத்திலும் மகிழ்ச்சி குறைவே. எதிர்காலம் எவ்வாறு அமையும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?  - வாசகி

    By DIN  |   Published on : 04th October 2019 11:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் களத்திர, நட்பு, அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானுடன் பலமாக இணைந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானத்தில் சுகாதிபதியுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். கர்மாதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானுடன் இணைந்திருக்கிறார். ஆரோக்கிய ஸ்தானத்தில் அஷ்டம, லாபாதிபதியான குருபகவான் சுய சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். தற்சமயம் ஏழரை நாட்டு சனியில் ஜன்ம சனி முடியும் தறுவாயில் உள்ளது. தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சந்திரபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அதனால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உங்கள் உடல்நலம் முழுவதும் சீராகி விடும். மருத்துவச் செலவுகளும் ஏற்படாது. குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சீராகவே செல்லும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai