Enable Javscript for better performance
எம்.சி.ஏ. படித்துள்ள என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? எப்போது வேலை கிடைக்கும்? எத்தகைய கணவன்- Dinamani

சுடச்சுட

    

    எம்.சி.ஏ. படித்துள்ள என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? எப்போது வேலை கிடைக்கும்? எத்தகைய கணவன் அமைவார்? லக்னத்தில் மாந்தி, ஏழில் சுக்கிரன் நல்லதா?  - வாசகர், கோயம்புத்தூர்

    By DIN  |   Published on : 04th October 2019 11:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் ஆறாம் வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி சனிபகவான் ஆட்சி பெற்று அயன ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். அயன ஸ்தானாதிபதி நவாம்சத்தில் ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பாகும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்து பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைக் கொடுக்கிறார். சுக, களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் லக்னத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய, சனி பகவான்களையும் களத்திர நட்பு ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானையும் பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானையும் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானமும் களத்திரகாரகருமான சுக்கிரபகவானும் பலம் பெற்று இருப்பதால் நன்றாக படித்து நல்ல வேலையில் உள்ள வரன் அடுத்த ஆண்டுக்குள் அமைந்து திருமணம் கைகூடும். அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். லக்னத்தில் மாந்தி குருபகவானுடன் இணைந்திருப்பதால் மாந்திக்கும் சுப பலன் உண்டாகும். எதிர்காலம், மணவாழ்க்கை சீராக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai