Enable Javscript for better performance
நான் சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன். இனி நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாம் என்று நினைக்க- Dinamani

சுடச்சுட

    

    நான் சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன். இனி நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாம் என்று நினைக்கிறேன். சொந்த வீடு கட்டும் பாக்கியம் உண்டா? வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? எனது மனைவி, எனது ஒரே பெண் குழந்தை இவர்களின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், திருவல்லிக்கேணி

    By DIN  |   Published on : 04th October 2019 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு கும்ப லக்னம், மீன ராசி. லக்னாதிபதியும் லாபாதிபதியும் லாப ஸ்தானத்தில் இணைந்து இருப்பது சிறப்பு. தொழில் ஸ்தானாதிபதி தைரிய ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று குருபகவானின் பார்வையை பெறுவதால் குருமங்கள யோகம், பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியபகவானையும் பார்வை செய்கிறார். இதனால் சிவராஜ யோகம் உண்டாகிறது. மேலும் குருபகவான் ஏழாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் பார்வை செய்கிறார். மேலும் சந்திரபகவான் குருபகவானின் கேந்திரத்தில் இருப்பதால் கஜகேசரி யோகமும் உண்டாகிறது. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் புதபகவானின் புக்தி இன்னும் இரண்டரை ஆண்டுகள் நடப்பதால் இந்த காலகட்டத்திற்குள் சொந்தவீடு கட்டவும், வெளிநாடு செல்லவும் வாய்ப்புண்டாகும். ஜோதிடத்தையும் தொழிலாக எடுத்துச் செய்யலாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். உங்கள் குடும்ப முன்னேற்றம் சிறப்பாக அமையும்.
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai