எனக்கு 60 வயதாகிறது. உடல்நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இது எப்பொழுது சரியாகும்? குடும்பத்திலும் மகிழ்ச்சி குறைவே. எதிர்காலம் எவ்வாறு அமையும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகி

உங்களுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் களத்திர, நட்பு, அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானுடன்

உங்களுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் களத்திர, நட்பு, அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானுடன் பலமாக இணைந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானத்தில் சுகாதிபதியுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். கர்மாதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானுடன் இணைந்திருக்கிறார். ஆரோக்கிய ஸ்தானத்தில் அஷ்டம, லாபாதிபதியான குருபகவான் சுய சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். தற்சமயம் ஏழரை நாட்டு சனியில் ஜன்ம சனி முடியும் தறுவாயில் உள்ளது. தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சந்திரபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அதனால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உங்கள் உடல்நலம் முழுவதும் சீராகி விடும். மருத்துவச் செலவுகளும் ஏற்படாது. குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சீராகவே செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com