எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது அமையும்? எத்தகைய பெண் அமைவார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், விருதாசலம்

உங்களுக்கு துலாம் லக்னம், கடகராசி, பூசம் நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் குடும்ப ஸ்தானத்தில் சுக, பூர்வபுண்ணியாதிபதியான

உங்களுக்கு துலாம் லக்னம், கடகராசி, பூசம் நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் குடும்ப ஸ்தானத்தில் சுக, பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதியான சூரியபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தொழில் ஸ்தானாதிபதியான சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார்கள். களத்திர ஸ்தனாதிபதியும் குடும்பாதிபதியுமான செவ்வாய்பகவான் அயன ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். அவருடன் கேதுபகவான் இணைந்திருப்பதாலும் குருபகவானால் பார்க்கப்படுவதாலும் செவ்வாய்தோஷம் இல்லை. மேலும் குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானின் மீதும் குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிர, சனிபகவான்களின் மீதும் விழுகிறது. அதனால் அரசு உத்தியோகம் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் கிடைக்கும். இந்த காலகட்டத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி திங்கள்கிழமைகளில் விநாயகப்பெருமானை வழிபட்டுவரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com