என் மகன், மருமகள் பேரனின் ஜாதகங்களை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் இருவருக்கும் படிப்புக்கேற்ற நல்ல வேலை எப்போது கிடைக்கும்? சொற்ப சம்பளத்திலேயே வேலை பார்க்கிறார்கள். பேரனின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர்

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மகர ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம், அஷ்டமாதிபதி செவ்வாய்பகவான் களத்திர ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார்.

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மகர ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம், அஷ்டமாதிபதி செவ்வாய்பகவான் களத்திர ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் தொழில், லாபாதிபதியான சனிபகவானுடனும் புதபகவானுடனும் இணைந்திருக்கிறார். களத்திர, நட்பு ஸ்தானாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதியான சந்திரபகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சுக்கிரபகவான் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். பாக்கிய, அயன ஸ்தானாதிபதியான குருபகவான் பன்னிரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் குருபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் நடக்கும். இந்த காலகட்டத்திற்குப்பிறகு அவர் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை மாற்றம் உண்டாகும்.
 உங்கள் மருமகளுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னாதிபதி களத்திர ஸ்தானத்தில் நீச்சம் பெற்று உச்சம் பெற்றுள்ள களத்திர ஸ்தானாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுவதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றும், பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் இருக்கிறார். தற்சமயம் ராகு மகா தசையில் கேது புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குப்பிறகு தொடங்கும் சுக்கிரபகவானின் புக்தியிலிருந்து அவருக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.
 உங்கள் பேரனுக்கும் கன்னி லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி தைரிய ஸ்தானத்திற்கும் பாக்கியாதிபதி லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள குருபகவானுடன் இணைந்திருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் சூரிய, செவ்வாய் பகவான்கள் திக்பலம் பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் சந்திர மகா தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் 2023- ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு நன்மைகள் உண்டாகத் தொடங்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். அவர்களை பிரதி திங்கள் கிழமைகளில் பார்வதி- பரமேஸ்வரரை வழிபட்டு வர சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com