Enable Javscript for better performance
என் மகள் முதுநிலை பட்டப்படிப்பு கடைசி ஆண்டு படிக்கிறாள். வேலை வாய்ப்பு எவ்வாறு அமையும்? நல்ல பதவி அம- Dinamani

சுடச்சுட

    

    என் மகள் முதுநிலை பட்டப்படிப்பு கடைசி ஆண்டு படிக்கிறாள். வேலை வாய்ப்பு எவ்வாறு அமையும்? நல்ல பதவி அமையுமா? 25 வயதுக்குள் மேல் திருமணம் செய்ய எண்ணியுள்ளேன். எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா? - வாசகி, அசோக்நகர்

    By DIN  |   Published on : 11th October 2019 07:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று, தனாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் மற்றும் பாக்கியாதிபதியான புதபகவான்களுடன் இணைந்திருக்கிறார். லாபாதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ஆட்சி பெற்றுள்ள தைரியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். இதனால் முழுமையான சிவராஜ யோகம் உண்டாகிறது. கல்வி ஸ்தானாதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தற்சமயம் அவருக்கு குருபகவானின் தசையில் முற்பகுதி நடக்கிறது. அவரை, மத்திய அரசு வேலைகளுடன் இந்திய குடிமைப்பணிக்கான தேர்வுகளுக்கு படிக்கச் சொல்லவும். அரசு துறைகளில் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். 26 வயதிற்குமேல் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai