Enable Javscript for better performance
மகிழ்ச்சியான எதிர்காலம் - வாசகர், மதுரை- Dinamani

சுடச்சுட

    

    மகிழ்ச்சியான எதிர்காலம் - வாசகர், மதுரை

    By DIN  |   Published on : 11th October 2019 07:23 PM  |   அ+அ அ-   |    |  

    உங்கள் தம்பிக்கு மகர லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னம் மற்றும் குடும்பாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் குருபகவானுடன் இணைந்து இருப்பது சிறப்பு. குருபகவானின்  ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கு அமர்ந்து இருக்கும் சூரிய, சுக்கிர, கேதுபகவான்களின் மீதும் ஏழாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும்  ஒன்பதாம் பார்வை, பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. களத்திர ஸ்தானாதிபதி சந்திரபகவான் குடும்ப ஸ்தானத்தில் பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் பாக்கியாதிபதியான புதபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai