எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? வேலை சிறப்பாக அமையுமா? ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், ராயப்பேட்டை

உங்களுக்கு மீன லக்னம், சதய நட்சத்திரம், கும்ப ராசி. லக்னம் மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான குருபகவான் அயன ஸ்தானத்தில் சுயசாரத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானுடன் இணைந்திருக்கிறார்.

உங்களுக்கு மீன லக்னம், சதய நட்சத்திரம், கும்ப ராசி. லக்னம் மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான குருபகவான் அயன ஸ்தானத்தில் சுயசாரத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானுடன் இணைந்திருக்கிறார். இதனால் அயன ஸ்தானம் சுபத்துவம் பெறுகிறது. அதோடு குருசந்திர யோகமும் உண்டாகிறது. தன, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார். இதனால் புதஆதித்ய யோகம் உண்டாகிறது. குடும்ப ஸ்தானத்தில் ராகுபகவானும் அஷ்டம ஸ்தானத்தில் கேதுபகவானும் இருப்பதால் சர்ப்ப தோஷம் உள்ளது. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனிபகவானின் தசையில் லக்னாதிபதியான குருபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே திருமணம் கைகூடும். மணவாழ்க்கை சீராக அமையும். திருமணத்திற்குப்பிறகு பொருளாதாரம், வளர்ச்சி அடையும். வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com