Enable Javscript for better performance
எங்கள் பூர்வீகமான காலி மனையுடன் கூடிய கட்டடம் சுமார் 20 ஆண்டுகளாக நல்ல வருமானம் இல்லாமல் உள்ளது. அதன- Dinamani

சுடச்சுட

    

    எங்கள் பூர்வீகமான காலி மனையுடன் கூடிய கட்டடம் சுமார் 20 ஆண்டுகளாக நல்ல வருமானம் இல்லாமல் உள்ளது. அதன் மூலம் நேர்மையான வருமானம் எப்போது கிடைக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர், எட்டயபுரம்

    By DIN  |   Published on : 18th October 2019 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிலும் தன, பூர்வபுண்ணியாதிபதி அயன ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். தர்மகர்மாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதும் சூரிய, குருபகவான்கள் லாப ஸ்தானத்திலும் இருப்பது சிறப்பாகும், இதனால் பூர்வீகச் சொத்தின் மூலம் வருமானம் உண்டு என்று கூறவேண்டும். தற்சமயம் சனிபகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் பூர்வீகச் சொத்திலிருந்து வருமானம் வரத் தொடங்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும் பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai