Enable Javscript for better performance
எனது திருமணம் இந்த வருடமாவது நடக்குமா? எனது சினிமா முயற்சியில் வெற்றி உண்டா? என்ன தொழில் செய்யலாம்?- Dinamani

சுடச்சுட

    

    எனது திருமணம் இந்த வருடமாவது நடக்குமா? எனது சினிமா முயற்சியில் வெற்றி உண்டா? என்ன தொழில் செய்யலாம்? நிரந்தர வேலை கிடைக்க என்ன செய்யலாம்?  - வாசகர், வடபழனி

    By DIN  |   Published on : 18th October 2019 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாமதிபதியான செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். அவருடன் தொழில் ஸ்தானாதிபதியும் இணைந்திருக்கிறார். குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் கேதுபகவானுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதியான சந்திரபகவான் சனிபகவானுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். களத்திர, நட்பு மற்றும் அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai