Enable Javscript for better performance
எனது மகனுக்கு சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக இருமல், தும்மல், சளி மற்றும் பல நோய்களால் சிரமப்பட்டு வரு- Dinamani

சுடச்சுட

    

    எனது மகனுக்கு சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக இருமல், தும்மல், சளி மற்றும் பல நோய்களால் சிரமப்பட்டு வருகிறார். மேலும் மெலிந்துள்ளதோடு மறதியும் சோம்பலும் இருக்கிறது. ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடுகிறார். இப்படி பல மருந்துகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. எப்போது உடல் ஆரோக்கியம் பெறுவார்?  - வாசகர், கொரட்டூர்

    By DIN  |   Published on : 18th October 2019 12:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னாதிபதியே ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாகி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். வியாதிக்கு ஆறாமதிபதியே காரணமாகிறார். லக்னமாகிய உயிர் ஸ்தானத்திற்கும் அதிபதியான கிரகம் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. வியாதியாலும் பெரியதாக அவதிப்படமாட்டார். தன, பூர்வபுண்ணியாதிபதி தன ஸ்தானத்திலும், பாக்கியாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சமும் பெற்றிருக்கிறார். குருபகவானின் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், எட்டாம் வீட்டின் மீதும், பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது. இதனால் அவரின் ஜாதகம் சராசரிக்கும் கூடுதலான பலம் பெற்றிருக்கிறது என்று கூற முடிகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கும். அந்த காலகட்டத்தில் தற்சமயம் உள்ள உடலுபாதைகள் முழுமையாகத் தீர்ந்துவிடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai