எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எப்படிப்பட்ட பெண் அமைவார்? எதிர்காலம் எப்படி இருக்கும்? - வாசகர், திருவள்ளூர்

உங்களுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான குருபகவான் கர்ம ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடனும் களத்திர ஸ்தானாதிபதியுடனும் இணைந்திருக்கிறார்.

உங்களுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான குருபகவான் கர்ம ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடனும் களத்திர ஸ்தானாதிபதியுடனும் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதி சுப பலம் பெற்றிருப்பதாலும் தற்சமயம் புதமகா தசை நடப்பதாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தகுந்த பெண் அருகிலேயே அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com