எனது தொழில் சித்த மருத்துவம். 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. இதுவரையிலும் வாடகை வீட்டில் தான் உள்ளேன். சொந்த வீடு அமையுமா? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? ஆயுள் எவ்வாறு உள்ளது? - வாசகர், சீர்காழி

உங்களுக்கு துலாம் லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி தன, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் கேதுபகவான்கள் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு துலாம் லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி தன, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் கேதுபகவான்கள் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். சுக, பூர்வபுண்ணியாதிபதி அயன ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் இருக்கிறார். பாக்கியாதிபதி லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற லாபாதிபதியுடன் இணைந்திருக்கிறார். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னம், தைரிய ஸ்தானம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். தற்சமயம் பாக்கியாதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு உங்கள் வாழ்க்கையில் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டாகத் தொடங்கும். 2024-ஆம் ஆண்டுக்குள் சொந்த வீடு வாங்கும் யோகமும் உள்ளது. இறுதிவரை யோக தசை நடக்கும். சொந்த ஊருக்குச் சென்று வசிக்கும்யோகமும் உள்ளது. பிரதி தினமும் விநாயப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com