சுடச்சுட

  

  எனக்கு முதல் திருமணம் விவாகரத்தாகிவிட்டது. மறுதிருமணத்துக்கான வாய்ப்புகள் உள்ளதா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?  - வாசகர், சேலம்

  By DIN  |   Published on : 06th September 2019 11:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உங்களுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை களத்திர, நட்பு ஸ்தானத்தின் மீதும் பாக்கிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. களத்திர நட்பு மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் லக்னத்தில் பாக்கியாதிபதியான சூரியபகவானுடனும் லாபாதிபதியான சுக்கிரபகவானுடனும் இணைந்திருக்கிறார். இவர்களை களத்திர ஸ்தானத்திலிருந்து குடும்பாதிபதியான சனிபகவான் பார்வை செய்கிறார். அஷ்டமாதிபதியான சந்திர பகவான் உச்சம் பெற்று அயன ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் செவ்வாய்பகவானால் பார்க்கப்படுகிறார். இதனால் சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. தர்மகர்மாதிபதி யோகம் லக்னத்தில் உண்டாவது சிறப்பு. தற்சமயம் சனிபகவானின் தசையில் கேதுபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு ஓராண்டுக்குள் மறுமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai