சுடச்சுட

    

    எனது மகனுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றது. மருமகள் குழந்தை பிறக்காத ஏக்கத்தில் பித்து பிடித்து காலமானார். எனக்கு ஒரே மகன். அவருக்கு மறுமணம் நடக்குமா? எப்போது நடக்கும்?  - வாசகர், சென்னை

    By DIN  |   Published on : 06th September 2019 11:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். சுக ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்திருக்கிறார். அதேநேரம் லக்னாதிபதி உச்சம் பெற்றும் பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் இருப்பதும் சிறப்பு. குருபகவான் கர்ம ஸ்தானத்தில் கேதுபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. தற்சமயம் சனிபகவானின் தசையில் சுயபுக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மறுமணம் கைகூடும். சுயதொழிலில் படிப்படியாக வளர்ச்சி உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai