சுடச்சுட

    

    என் தொழிலில் கடன் கூடிவிட்டது. எப்பொழுது சரியாகும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?  - வாசகர், ஈரோடு

    By DIN  |   Published on : 06th September 2019 11:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு மீன லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் லக்னத்திற்கும் அதிபதியான குருபகவான் உச்சம் பெற்று அஷ்டம ஸ்தானம் அங்கு அமர்ந்து இருக்கும் கேதுபகவான், லாப ஸ்தானம் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரபகவான், லக்னம் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவான் ஆகியோரை பார்வை செய்கிறார். ஆறாமதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானத்தில் சந்திர, புதபகவான்களுடன் இணைந்திருக்கிறார். இதனால் செய்தொழிலில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. தற்சமயம் குருபகவானின் தசையில் சுயபுக்தி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் நடக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். இது ஏழரை நாட்டுசனியில் இரண்டாம் சுற்றாக அமைவதால் அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறையும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai