சுடச்சுட

    

    என் மருமகனுக்கு வேலையில் உயர்வு எப்பொழுது? வேறு வேலைக்கு முயற்சி செய்யலாமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்?  - வாசகர், திருச்சி

    By DIN  |   Published on : 06th September 2019 11:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மருமகனுக்கு துலாம் லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி தைரிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். இவர்களை குருபகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து பார்வை செய்கிறார். மேலும் குருபகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய, செவ்வாய், புதபகவான்களின் மீதும் படிகிறது. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சூரியபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. தசா புக்தி நாதர்களைக் குருபகவான் பார்வை செய்கிறார். இதனால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் அவரின் வேலையில் உயர்வு உண்டாகும். வேறு உயர்வான வேலைக்கும் வாய்ப்புள்ளது. தொடரும் தொழில் ஸ்தானாதிபதியின் தசையில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரச் சொல்லவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai