சுடச்சுட

  

  நான் தனியார் துறையில் பணிபுரிந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றேன். என் கணவரும் நல்ல வேலையில் இருந்ததால் பணி நீட்டிப்பை மறுத்துவிட்டேன். சென்ற ஆகஸ்ட் மாதத்தில் என் கணவருக்கு திடீரென்று வேலை போய் விட்டது. பொருளாதார வீழ்ச்சி எங்களை பலவகையில் பாதித்துவிட்டது. பொருளாதார நிர்பந்தங்கள் பல உள்ளன. என் ஜாதகம் யோக ஜாதகமா? பாக்கியாதிபதி லாப ஸ்தானத்தில் இருந்தாலும் பாதகாதிபத்யம் வேலை செய்கிறதா? சுகாதிபதியான சனி தசையில் பாதி முடிந்து விட்டது. மீதி பகுதி எவ்வாறு இருக்கும்? எதிர்காலத்தைப் பற்றிக்

  Published on : 06th September 2019 11:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உங்களுக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் லாப ஸ்தானத்தில் சுய சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். சந்திரபகவான் நீர் கிரகமாவதால் சந்திரபகவானின் காரகத்துவங்களின் மூலம் நன்மை கிடைக்கும். குறிப்பாக, நீர் உணவு, கடல் சார்ந்த துறைகளின் மூலம் நன்மைகள் உண்டாகும். மேலும் வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் மூலமும் ஏற்றுமதி இறக்குமதி மூலமும் வருமானம் கிடைக்கும். அதேநேரம் சந்திர பலம் குறைந்திருந்தால் நீரழிவு போன்ற உபாதைகளும் தோன்ற வாய்ப்புள்ளது.
   ஸ்திர லக்னங்களுக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீடு பாதக ஸ்தானமாக வருகிறது. பாதகாதிபதி லாப ஸ்தானத்தில் இருப்பதால் சந்திரபகவானின் சுபத் தன்மைகள் குறையாது. ஒன்பதாமதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால் பல வகையிலிருந்து வருமானம் வந்து சேரும் என்றும் கூறவேண்டும். அனுபவத்தில் பார்க்கும் பொழுது பாதகாதிபதி என்று குறிப்பிட்டிருக்கும் கிரகங்கள் பெரிதாக பாதகங்களைக் கொடுப்பதில்லை என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
   லக்னம் மற்றும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுயசாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். லக்னாதிபதி, ஆறாமதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது இரண்டு பாவங்களுக்கும் நன்மை செய்யும் அமைப்பாகும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் லக்னத்தில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
   குருபகவானின் ஐந்தாம் பார்வை பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டின்மீதும் அங்கு அமர்ந்திருக்கும் ஞானகாரகரான கேதுபகவானின் மீதும், ஏழாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீதும் படிகிறது. குருபகவான் முதல் திரிகோணத்தில் அமர்ந்து கொண்டு மற்ற இரண்டு திரிகோண வீடுகளையும் மூன்றாம் கேந்திர வீட்டையும் பார்வை செய்வது சிறப்பு. குருபார்க்க கோடி புண்ணியம், கோடி பாபா நிவர்த்தி என்பார்கள். குருபகவானின் பார்வையினால் மூன்று கோடி தோஷங்கள் விலகும் என்றும் உள்ளது. அதனால் முழுச் சுபக்கிரகம் என்றழைக்கப்படும் குருபகவானின் மூலம் கிடைக்க வேண்டிய நன்மைகள் அனைத்தும் நல்ல முறையில் கிடைத்துவிடும். அவர் தனகாரகர் புத்திரகாரகராக ஆவதால் பொருளாதாரத்தில் உயர்வு, குழந்தைகளால் நன்மை ஆகியவைகளில் எந்தக் குறையும் ஏற்படாது என்றும் கூற வேண்டும்.
   தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். தைரிய முயற்சி ஸ்தானாதிபதி தன் ராசிக்கு விரய ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறு குறை என்று கூறவேண்டும். இதனால் உங்கள் முயற்சிகள் பொருள், கால விரயத்திற்குட்பட்டே வெற்றி பெறும் என்று கூறினாலும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் இருப்பது மேலான நன்மைகளை உண்டாக்கும் அமைப்பு என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
   களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். மூன்றாம் கேந்திரத்திற்கு அதிபதியான கிரகம் உச்ச கேந்திரத்தில் அமர்ந்திருப்பது கணவரின் வாழ்க்கையை மேம்படுத்தும் அமைப்பாகும். அதோடு கணவருடன் இறுதிவரை இணக்கமாக வாழவும் பரஸ்பரம் அன்னோன்யமாக வாழவும் உத்திரவாதம் தரும் அமைப்பாகும்.
   அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான், செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். பெண்களுக்கு எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானமுமாகவும் ஆவதால் இத்தகைய நிலையினால் தீர்க்க மாங்கல்யம் உண்டாகும் என்று கூறவேண்டும். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுக்கதிபதியான சூரியபகவான் பதினொன்றாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். கேதுபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். ராகுபகவான் லாப ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
   பொதுவாக, சனி, சுக்கிரன், ராகு, கேது பகவான்கள் பிற்கூறிலேயே நல்ல பலன்களைத் தருவார்கள் என்பது ஜோதிட விதி.
   அதோடு, சனி மகாதசை சுக்கிர புக்தி, சுக்கிர மகாதசை சனி புக்தியில் ஜாதகருக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று கூறுவார்கள். அதாவது, இதுவரை பயணித்த பாதையிலிருந்து மாறுபட்டு பயணப்பட வேண்டிய காலகட்டமாக அமையும் என்று கூற வேண்டும். சுக்கிர புக்தி 38 மாதங்களாகும். அதில் 18 மாதங்கள் கழிந்தவுடன் உங்கள் குடும்பத்தில் பொருளாதாரம் பெரிய வீழ்ச்சியை அடைந்து நின்று விட்டது என்று கணக்கிடுகின்றோம். இது சராசரியாக ஓராண்டு காலம் ஸ்தம்பித்து விட்டது. இந்த மாதத்திலிருந்து மறுபடியும் புதிய வாய்ப்பு கிடைத்து அதில் பயணப்பட நேரிடும்.
   சனி மகாதசை தொடங்கி ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டபடியால் பிற்பகுதி சீரும் சிறப்புமாகச் செல்லும். லாப ஸ்தானத்தில் லக்னாதிபதி, தர்மகர்மாதிபதிகள், லாபாதிபதி மற்றும் ராகுபகவான்கள் இணைந்திருப்பதால் இறுதிவரை, கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு அனைத்திற்கும் எந்தக் குறைவும் ஏற்படாது. பாதகாதிபதி லாப ஸ்தானத்தில் இருப்பது குறையல்ல. உங்கள் ஜாதகம் சராசரிக்கும் சற்று கூடுதல் பலம் பெற்ற ஜாதகம் என்று கூறவேண்டும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai