Enable Javscript for better performance
பி.இ., படித்துள்ள என் மகளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? பரிகாரம் ஏதும் செ- Dinamani

சுடச்சுட

    

    பி.இ., படித்துள்ள என் மகளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?  - வாசகர், சென்னை

    By DIN  |   Published on : 06th September 2019 11:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் உச்சம் பெற்று அயனம், குடும்பம் மற்றும் சுக ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். குருபகவானுடன் பாக்கியாதிபதியான சூரியபகவான் இருப்பதால் சிவராஜ யோகம் உண்டாகிறது. கஜகேசரி யோகம், ருசக யோக ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. களத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அவரே தொழில் ஸ்தானாதிபதியுமாகிறார். இதனால் திருமணம் வேலை இரண்டும் சிறப்பாக அமையும். தற்சமயம் குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் இன்னும் ஓராண்டுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைத்துவிடும், மணவாழ்க்கை புத்திரபாக்கியம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai