என் மகளுக்கு மறுபடியும் எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், திருவண்ணாமலை

உங்கள் மகளுக்கு மகர லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருப்பது சச மகா யோகத்தைக் கொடுக்கிறது

உங்கள் மகளுக்கு மகர லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருப்பது சச மகா யோகத்தைக் கொடுக்கிறது. பூர்வபுண்ணியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய், குருபகவான்களுடன் இணைந்திருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் குருசந்திர யோகம், குருமங்கள யோகம், சந்திரமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. தற்சமயம் குருபகவானின் தசையில் செவ்வாய் புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கும். அதனால் உடனடியாகவே அவருக்கு தகுதிக்கேற்ற வேலை உயரிய சம்பளத்தில் கிடைத்துவிடும். உத்தியோகத்தில் நல்ல நிலைமை எட்டி விடுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com