சுடச்சுட

    

    எனது மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? இரும்பு சம்பந்தமான தொழில் செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறான். தொழிலில் முன்னேற்றம் உண்டா? லாபகரமாக அமையுமா?  - வாசகர், உள்ளகரம்

    By DIN  |   Published on : 13th September 2019 01:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு துலா லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று நீச்சம் பெற்றுள்ள சூரியபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். சுக, பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவான் லாப ஸ்தானத்தில் இருந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தன, களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று பாக்கியாதிபதியான புதபகவானுடன் இணைந்திருக்கிறார். இவர்களை உச்சம் பெற்ற குருபகவான் பார்வை செய்கிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. தற்சமயம் லக்னாதிபதியின் புக்தி நடக்கத்தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். இரும்பு சம்பந்தமான பொருள்கள், பிளாஸ்டிக் குழாய்கள் இரண்டும் முறையே, சனி, சுக்கிரபகவான்களின் ஆதிக்கத்தைப் பெற்றிருப்பதாலும், அவர்கள் இருவரும் லக்னத்திற்கு யோகாதிபதிகளாக ஆவதாலும் அந்தத் தொழிலில் ஈடுபட்டு வளர்ச்சியைக் காண்பார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai