சுடச்சுட

  

  என் அண்ணனுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண் பார்த்து வருகிறோம். சொந்தமாக தொழில் செய்து வருவதைக் காரணம் கூறி தவிர்க்கிறார்கள். திருமணத்தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகி, ஆதம்பாக்கம்

  By DIN  |   Published on : 13th September 2019 01:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உங்கள் சகோதரருக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். சர்ப்ப தோஷம் உள்ளது. இதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் மூலதிரிகோணம் பெற்றுள்ள லக்னாதிபதியுடனும் பூர்வபுண்ணியாதிபதியுடனும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சுகாதிபதியுடனும் இணைந்திருக்கிறார். தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் வர்கோத்தமம் பெற்றிருக்கும் குருபகவானின் தசையில் தர்மகர்மாதிபதியின் புக்தி நடக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai