சுடச்சுட

    

    என் மகளுக்கு வரன் இன்னும் சரியாக அமையவில்லை. எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் வரன் அமையும்? அரசு உத்தியோகம் கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர், மதுரை

    By DIN  |   Published on : 13th September 2019 01:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னத்தில் லக்னாதிபதி, பாக்கியாதிபதி மற்றும் கேதுபகவான்கள் இணைந்திருக்கிறார்கள். சுக, களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சமதோஷமுள்ள வரன் தெற்கு, தென்மேற்கு திசையில் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி, அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். எதிர்காலம் சீராக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai