எனக்கு இரைப்பையில் கேன்சர் உள்ளது என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். எனது ஆயுள் பலம் எவ்வாறு உள்ளது? எனக்கு குழந்தைகள் இல்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்? - வாசகி, சென்னை

உங்களுக்கு மேஷ லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி தைரிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார்.

உங்களுக்கு மேஷ லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி தைரிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார். ஆறாமதிபதி லக்னத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சனிபகவானுடன் இணைந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் லக்னாதிபதியுடன் தசை முடியும் தறுவாயில் உள்ளதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். முழுமையான குணம் உண்டாகும். தினமும் 108 முறை ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதி வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com