எனது பேத்திக்கு வயது 29 ஆகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? அரசு அல்லது தனியார் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்குமா? - வாசகர், திருவண்ணாமலை

உங்கள் பேத்திக்கு மேஷ லக்னம் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னாதிபதி, தைரிய ஸ்தானாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் கேதுபகவான்கள் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள்

உங்கள் பேத்திக்கு மேஷ லக்னம் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னாதிபதி, தைரிய ஸ்தானாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் கேதுபகவான்கள் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். பாக்கியாதிபதியாகிய குருபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் அங்கு அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியான சனிபகவான், லாப ஸ்தானம் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவான் ஆகியோரை பார்வை செய்கிறார். இதனால் தகுதியான வரன் அரசு துறையில் வேலை பார்க்கும் வரன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் பேத்திக்கும் அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மற்றபடி எதிர்காலம், மணவாழ்க்கை சீராக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com