என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? எத்தகைய வரன் அமைவார்? தற்போது ராகு தசை நடப்பதால் திருமணம் செய்யலாமா? கும்ப லக்னம், சிம்ம ராசி காரர்களுக்கு திருமணம் சரியாக அமையாது என்கிறார்கள். இது சரியா? - வாசகர், திருச்சி

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி அயன ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார்

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி அயன ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி தொழில் ஸ்தானத்தில் சூரிய, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானாதிபதியாகி நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பது சிறப்பு. குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து அயன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும் குடும்ப ஸ்தானத்தையும் சுக ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானையும் பார்வை செய்கிறார். கும்ப லக்னத்திற்கு ராகுபகவான் யோக காரராகவே கருதப்படுகிறார். தற்சமயம் ராகு மகாதசையில் குருபகவானின் புக்தி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது. இந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் தென்கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி கும்ப லக்னம், சிம்ம ராசிக்கு மணவாழ்க்கை சீராக அமையாது என்பது சரியானதல்ல. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com