என் மகளுக்கு திருமணமாகி மூன்றாண்டாகியும் இன்னும் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. மிகவும் மன உளைச்சலாக உள்ளது. எப்போது புத்திர பாக்கியம் கிடைக்கும்? இதன் நிமித்தமாக சந்தான கோபால விரதம் போன்ற பரிகாரங்கள் செய்வது அவசியமா? - வாசகர், மயிலாடுதுறை

உங்கள் மகளுக்கு மகர லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி அயன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. புத்திரகாரகர் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து குடும்பம்

உங்கள் மகளுக்கு மகர லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி அயன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. புத்திரகாரகர் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து குடும்பம், சுகம், ஆறாம் வீடுகளைப் பார்வை செய்கிறார். தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியான புதபகவானின் தசையில் சுக, லாபாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. உங்கள் மருமகனுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானம் மற்றும் அஷ்டமாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான மீன ராசியிலேயே ஆட்சி பெற்று வர்கோத்தமத்தில் இருக்கிறார். தற்சமயம் அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி திங்கள் கிழமைகளில் அம்மனை வழிபடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com