நான் இளநிலை மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) முடித்துள்ளேன். முதுநிலை படிக்கும் வாய்ப்பு உண்டா? ஒன்பதில் ராகு உள்ளதால் புத்திரபாக்கியம் கடினம் என்கிறார்கள். இதற்கு தீர்வு உண்டா? - வாசகி, திருச்சி

உங்களுக்கு கும்ப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். இதனால் சச மகா யோகம் உண்டாகிறது

உங்களுக்கு கும்ப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். இதனால் சச மகா யோகம் உண்டாகிறது. பூர்வபுண்ணியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சூரியபகவானும் ராகுபகவானுடனும் இணைந்திருக்கிறார். சுக பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்து தர்மகர்மாதிபதி யோகத்தைப் பெறுகிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் குருபகவானின் புக்தி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் முதுநிலை படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு மாதவிடாய்ப் பிரச்னை தீர்ந்துவிடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com