Enable Javscript for better performance
என்னுடயை மகள் வயிற்றுப் பேரன் மிகவும் சுட்டித்தனம் செய்கிறான். சமாளிக்க முடியவில்லை. ஏதாவது சிரமத்தை- Dinamani

சுடச்சுட

    

    என்னுடயை மகள் வயிற்றுப் பேரன் மிகவும் சுட்டித்தனம் செய்கிறான். சமாளிக்க முடியவில்லை. ஏதாவது சிரமத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறான். சின்ன குழந்தை என்று எண்ண முடியவில்லை. அத்தளவுக்கு தொந்தரவு கொடுக்கிறான். அவனை நினைத்து எங்களுக்குப் பயமாக உள்ளது. நன்றாக படிப்பானா? நல்ல குணமுடன் இருப்பானா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகர், சுசீந்திரம்

    By DIN  |   Published on : 27th September 2019 03:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் பேரனுக்கு மிதுன லக்னம், பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் அயன ஸ்தானத்தில் ஆறு மற்றும் பதினொன்றாமதிபதியான செவ்வாய்பகவானுடன் இணைந்திருக்கிறார். "மறைந்த புதன் நிறைந்த நிதி' என்பது ஜோதிட வழக்கு. பாக்கியாதிபதியும் விபரீத ராஜயோகம் பெற்று ஆறாம் வீட்டில் அமர்ந்து லக்னாதிபதியைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதி லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். தைரியாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் உச்சம் பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவானின் தசை நடக்கிறது. இதன் பிற்பகுதியிருந்து அதாவது இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு அவரின் பழக்க வழக்கங்களில் நல்ல மாற்றம் உண்டாகத் தொடங்கிவிடும். படிப்பிலும் சிறந்து விளங்குவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai