எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? என் பொருளாதார நிலைப்பற்றி கூறவும். எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

உங்களுக்கு மிதுன லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று


திருமணம் கைகூடும்

- வாசகர், தூத்துக்குடி

உங்களுக்கு மிதுன லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும்  அதிபதியான சுக்கிரபகவான் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் சுக ஸ்தானத்தில் செவ்வாய்பகவானுடன் இணைந்து பத்தாம் வீட்டைப் பார்வை செய்கிறார். 

களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் அங்கு உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் சூரியபகவானையும் (சிவராஜயோகம்) , ஒன்பதாம் பார்வையாக லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர, ராகு பகவான்களையும் (குருசந்திர யோகம் ) பார்வை செய்கிறார். இதனால் கைத்தொழில் நன்றாக அமையும். வருமானமும் சிறப்பாகவே இருக்கும். தற்சமயம் புதமகாதசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் சுக்கிரபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com