வீட்டை விற்க வேண்டாம்!

எனக்கு 2014 -ஆம் ஆண்டு வரை நல்ல வருமானம் வந்துகொண்டிருந்தது. அந்த காலத்தில் வாங்கிய வீட்டிற்கு தவணைக் கட்டுவதில் தற்சமயம் கஷ்டமாக உள்ளது. அதை விற்று விடலாம் என்று நினைக்கிறேன்.


எனக்கு 2014 -ஆம் ஆண்டு வரை நல்ல வருமானம் வந்துகொண்டிருந்தது. அந்த காலத்தில் வாங்கிய வீட்டிற்கு தவணைக் கட்டுவதில் தற்சமயம் கஷ்டமாக உள்ளது. அதை விற்று விடலாம் என்று நினைக்கிறேன். அதோடு ஏஜென்சி எடுத்து கமிஷன் முறையில் தொழில் தொடங்கலாமா? இன்னும் ஓராண்டுக்குப் பிறகு வக்கீலாகவும் தொழில் புரிய விரும்புகிறேன்; நிறைவேறுமா? 

வாசகர், மயிலாப்பூர்.

உங்களுக்கு மகர லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம் ஒன்றாம் பாதம். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்.

தர்மகர்மாதிபதிகள் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து மஹாவிஷ்ணு, மஹாலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறார்கள். 

சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றமர்ந்திருப்பதால் பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைக் கொடுக்கிறார். சுக லாபாதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக ஆறாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும், ஒன்பதாம்  பார்வையாக பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் தர்மகர்மாதிபதிகளையும் பார்வை செய்கிறார். 
ராகு பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வர்கோத்தமம் பெற்று சூரிய, சந்திர பகவான்களுடன் இணைந்திருக்கிறார். 
தற்சமயம் குரு மஹா தசையில் சுக்கிர பகவானின் புக்தி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும். குரு மஹா தசையின் பிற்பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும். 
வீட்டை விற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. சொந்தத் தொழிலை குடும்பத்தினர் பெயரில் பெரிய முதலீடு எதுவும் செய்யாமல் குறைந்த செலவில் செய்யலாம். வக்கீல் தொழிலை இன்னும் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு தொடங்கலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com