Enable Javscript for better performance
என் மகனுக்கு 38 வயது ஆகிறது. திருமணம் தள்ளிப்போகின்றது. எப்போது திருமணம் கைகூடும்? குணமான பெண் அமைவா- Dinamani

சுடச்சுட

    

    என் மகனுக்கு 38 வயது ஆகிறது. திருமணம் தள்ளிப்போகின்றது. எப்போது திருமணம் கைகூடும்? குணமான பெண் அமைவாரா? நிரந்தர வேலை கிடைக்குமா? நல்ல வேலை, திருமணம் அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர், சேலம்

    By DIN  |   Published on : 14th February 2020 03:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கும்பராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் ஐந்தாம் வீட்டில் சூரியபகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறார். ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானத்தில் நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுவதால் சூரியபகவானுக்கும் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கிறது. களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கியாதிபதியும் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமைந்திருக்கிறார்கள். தற்சமயம் பாக்கியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு, ஜூலை மாதத்திற்குள்படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai