Enable Javscript for better performance
நான் தனியார் துறையில் 20 ஆண்டுகளாக வேலைப் பார்த்து வருகிறேன். வாடகை வீட்டில் வசிக்கிறேன். இடையில் நண- Dinamani

சுடச்சுட

    

    நான் தனியார் துறையில் 20 ஆண்டுகளாக வேலைப் பார்த்து வருகிறேன். வாடகை வீட்டில் வசிக்கிறேன். இடையில் நண்பருடன் சேர்ந்து தொழில் ஆரம்பித்தேன். அதிலும் நட்டம். வேலையில் போதுமான ஊதியம் இல்லை. தற்போது அரசாங்க வேலைக்காக தேர்வு எழுதியுள்ளேன். அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதா? சொந்த வீடு அமையுமா? வேறு தொழில் ஏதும் தொடங்கலாமா?  - வாசகர், விருத்தாசலம்

    By DIN  |   Published on : 14th February 2020 03:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு கடக லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி நான்காம் வீட்டில் திக்பலம் பெற்று இருக்கிறார். பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் தர்மகர்மாதிபதிகளாகி அயன ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். குருபகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானின் மீதும் (குருசந்திர யோகம்); ஏழாம் பார்வையாக ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்தையும்; ஒன்பதாம் பார்வையாக எட்டாம் வீட்டையும்; அங்கு அமர்ந்திருக்கும் சூரியன், புதன், சுக்கிர பகவான்களையும் பார்வை செய்கிறார். குருமங்கள யோகம், சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அரசுக்கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய் மற்றும் குருபகவான்கள் வலுத்திருப்பதால் விரைவில் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு சொந்த வீடு அமையும். புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai